செவ்வாய், 13 மார்ச், 2007

உன்னிடம் விடைபெற்றுக் கொண்ட
பின் உன் தோள்களில் உணர்ந்திருப்பாய்
என் நேசப் பறவைகளை
நான் வரும் போது அழைத்து வந்திருந்தேன்
என்னுடன் உன் நினைவுகளின்
அரூபத்தை
என் மனதில் துடிதுடித்து உயிர்த்தெழும்
என் உணர்வுகளை தின்று தீர்த்துக்
கொண்டிருக்கிறது உன் அருபம்
உன் மௌன புன்னகைகளை தானியங்களாக்கி
உணவிடு உன் அறையில் இருக்கும்
என் நேசப் பறவைகளுக்கு

கருத்துகள் இல்லை: