இறுகும் அதிகாரத்தின் கைகள்
பாதி வெப்பமும் பாதி குளிர்ச்சியுமான
விசித்திர இயல்புடையது இந்நகரம்
அதிகரத்தினால் நிறைந்திருக்கிறது இந்நகரம்
அதிகாரம் இதுவரை எந்த நகரத்தையும்
வென்றதில்லை
அதன் ஆன்மாவை பிடித்து அதன் வளங்களை
உறிஞ்சி விடும் இயல்புடையது
விளையாட்டு பெரும் போராய்
உணரப்பட்டதில் அதிகாரத்திற்கு
பங்குண்டு
தேசதுரோகிகளின் பட்டியல் அதிகாரத்தினால்
தயாரிக்கபடுகிறது அது நீண்டதாயும்
முடிவற்றதாயும் இருக்கிறது
அதிகாரம் தேசியம் தேசியம் என்று
கத்திக் கொண்டே இருக்கிறது
அதிகாரம் தன்னை தக்க வைக்க
நகரெங்கும் படைகளை அனுப்புகிறது
படைகளால் கொல்லப்பட்ட உடல்கள்
நகர எல்லைகளில் குவிகின்றன
காணாமல் போன குழந்தைகளின் பெற்றோர்
இரவுகளை அழுதுகொண்டே கழிக்கிறார்கள்
படைகளால் வண்புணரப்பட்ட பெண்களின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது
நகர வீதிகளில் தாய்மார்கள் தங்களையும்
வன்புணரும்படி அதிகாரத்திற்கு எதிராய்
கூக்குரலிடுகிறார்கள்
அதிகாரத்தின் கண்கள் அதை
காணாது முடிக்கொள்கின்றன
மனித உரிமை பற்றி
பேசுவது அதிகாரத்திற்கு பிடிப்பதில்லை
அதிகாரத்தின் மனசாட்சியை திருப்திபடுத்த பலரும்
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
தூக்கிலிடபடுகிறார்கள்
அனைத்தும் சரியாக அதிகாரம்
உங்களை கனவு காணசொல்கிறது
அதிகாரத்தின் புனித வாய் உங்களை ஆசிர்வதிக்கிறது
"அவா அவா கடமையை அவா அவா செய்யுங்கோ"
அதிகாரத்தின் வளர்ப்பு நாய்கள் நகரில் அதிகம்
அவை ஜனாதிபதியாகவும், பிரதம மந்திரியாக்கவும்வலம்
வருகின்றன
அதிகாரத்தின் கண்கள் உங்களை உற்று நோக்குவது
உங்களுக்கு தெரியாது அது உங்கள்
மென்னியை பிடிக்கும் வரை
மெல்ல மெல்ல அனைத்தையும் நீங்கள்
இழந்து விட்ட பின்னும் உங்கள் குரல்வளை பிடித்து
இனி இறுகும் அதிகாரத்தின் கைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக